கற்பூர கரைசல்
தேவையான பொருட்கள் :
கோமியம் - 5 லிட்டர்
(பழைய கோமியம் என்றால் 3 லிட்டர் போதுமானது)
வேப்பெண்ணெய் - 500 மில்லி
கிளிஞ்சல் சுண்ணாம்பு - 100 கிராம்
மஞ்சள்தூள் - 100 கிராம்
பச்சை கற்பூரம் - 30 கிராம்
நீலகிரி தைலம் - 30 மில்லி
சீயக்காய் பொடி - 50 கிராம்
செய்முறை :
பச்சை கற்பூரத்தை, நீலகிரி தைலத்தில் சேர்த்தால், கற்பூரம் கரைந்து, நீர்ம நிலைக்கு வந்துவிடும்.
சீயக்காய் பொடியை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து கொள்ளவும்.
சீயக்காய் கரைசலை, வேப்பெண்ணெய்யுடன் சேர்த்து கலக்கும் போது, வேப்பெண்ணெய் படலமாக தண்ணீரின் மீது மிதக்காமல், தண்ணீரோடு நன்கு கலந்துவிடும்.
கோமியத்துடன் மஞ்சள்தூள், சுண்ணாம்பு, சீயக்காய், வேப்பெண்ணெய் கரைசல் மற்றும் நீலகிரி தைலத்துடன் சேர்க்கப்பட்ட பச்சை கற்பூரம் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கி பயன்படுத்தவும்.
பயன்படுத்தும் அளவு :
இம்முறையில் தயாரான கற்பூர கரைசலை 10 லிட்டர் டேங்க்கிற்கு 100 மில்லி பயன்படுத்தலாம்.
குறிப்பு :
பச்சைகற்பூர கரைசலை தேவைப்படும்போது, செய்து பயன்படுத்தவும்.
சேமித்து வைத்து பயன்படுத்தும் போது, வீரியம் இருக்காது.
No comments:
Post a Comment